×

கேரள லாட்டரியில் முதல் பரிசு பெயர், விவரங்களை வெளியிட வேண்டாம்: ரூ.12 கோடி பரிசு பெற்றவர் அரசுக்கு வேண்டுகோள்

திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரியில் கடந்த மாதம் 24ம் தேதி விஷு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசு ரூ.12 கோடி VE 475588 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு கிடைத்தது. இந்த லாட்டரி மலப்புரம் மாவட்டம் செம்மநாடு என்ற பகுதியில் விற்பனையாகி இருந்தது. குலுக்கல் நடைபெற்ற பின்னர் ஒரு மாதத்திற்குள் டிக்கெட்டை ஒப்படைத்து அதற்கான பரிசுத் தொகையை வாங்கிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பரிசுக்கான தொகை கிடைக்காது. இந்நிலையில் 1 மாதம் ஆவதற்கு 2 நாள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த 22ம்தேதி அந்த அதிர்ஷ்டசாலி பரிசு விழுந்த டிக்கெட்டை யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக கோழிக்கோட்டிலுள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்துள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோழிக்கோட்டை சேர்ந்த அந்த அதிர்ஷ்டசாலி கேரள லாட்டரித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தயவுசெய்து தன்னுடைய பெயர் மற்றும் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த அதிர்ஷ்டசாலி கோழிக்கோட்டிலுள்ள வங்கி மேலாளரிடம் டிக்கெட்டை ஒப்படைத்தார். இதன் பிறகு கமிஷன் மற்றும் வரி நீங்கலாக ₹7.58 கோடி பணம் வழங்கப்பட்டது.

The post கேரள லாட்டரியில் முதல் பரிசு பெயர், விவரங்களை வெளியிட வேண்டாம்: ரூ.12 கோடி பரிசு பெற்றவர் அரசுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Govt. Thiruvananthapuram ,Vishu bumper ,Govt ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...